/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது
/
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது
ADDED : செப் 29, 2024 04:55 AM

அலங்காநல்லுார் : மதுரை மேற்கு ஒன்றியம் அரியூர் ஊராட்சியில் மத்திய அரசின் திட்ட நிதி ரூ.10 லட்சத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டது. அதில் ரூ.5 காசு போட்டால் தானியங்கி இயந்திரம் மூலம் தண்ணீர் பிடித்து கொள்ளலாம். இந்த வசதி மூலம் பலர் பயனடைந்து வந்தனர்.
அரியூர் மட்டுமின்றி சுற்றுப்பகுதி மக்களும் டூவீலர்களில் வந்து குடிநீர் பிடித்து சென்றனர். அந்த இயந்திரம் 6 மாதங்களாக பழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வெளியில் 20 லிட்டர் கேன் ரூ.35க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் அதனருகே உள்ள தண்ணீர் தொட்டியும் 6 மாதங்களாக பழுதாகி உள்ளது. பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.