/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பை வண்டிகளை இடம் மாற்ற கோரிக்கை
/
குப்பை வண்டிகளை இடம் மாற்ற கோரிக்கை
ADDED : அக் 21, 2024 05:11 AM
திருநகர்: மதுரை மாநகராட்சி 95வது வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை பாண்டியன்நகர் பூங்காமுன்பு கொட்டி பிரிக்கப்படுகிறது. குப்பை சேரிகரிக்கும் ட்ரை சைக்கிள்கள் பூங்காவுக்குள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. பூங்காவுக்குள் நடைப்பயிற்சி மேற்கொள்வோர், விளையாடச் செல்லும் சிறுவர்கள் பாதிப்படைகின்றனர்.
குடியிருப்போர் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், ''பொது மக்கள் கவுன்சிலர் இந்திராகாந்தியிடம் கோரிக்கை வைத்தனர். சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்த மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, உதவி கமிஷனர் ராதா, பொறியாளர்களிடம், பாண்டியன் நகர் பூங்காவுக்குள் நிறுத்தப்படும் குப்பை வண்டிகளை சுந்தர்நகர் கடைசி பகுதியில் நிறுத்த வேண்டும் என இந்திராகாந்தி கோரிக்கை வைத்தார். 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என மண்டல தலைவர், உதவி கமிஷனர், பொறியாளர்கள் கவுன்சிலரிடம் உறுதியளித்தனர்.