/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முகூர்த்த நாள், வார விடுமுறை ரயில்களில் அதிகரித்த கூட்டம்: சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுகோள்

ADDED : ஜூலை 08, 2025 03:26 AM
மதுரை: ஆனி மாத கடைசி முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ஜூலை 12, 13களில் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் ரயில்கள் இயக்க பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆனி மாத கடைசி முகூர்த்த நாள், வார விடுமுறை காரணமாக ஜூலை 11, 12ல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், ஜூலை 13 ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கும் பயணிகள் பலர் பயணிப்பதால் ரயில்கள் டிக்கெட் இன்றி நிரம்பி வழிகின்றன.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களான திருச்செந்துார், அனந்தபுரி, குருவாயூர், நெல்லை, கொல்லம், போடி, ராமேஸ்வரம், நாகர்கோவில் வந்தே பாரத், நெல்லை வந்தே பாரத், பாண்டியன், வைகை உள்ளிட்ட ரயில்களில் இருமார்க்கங்களிலும் 150க்கும் மேல் காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது.கன்னியாகுமரி, பொதிகை, முத்துநகர் ஆகிய ரயில்களில்
பயணிகள் முன்பதிவு செய்ய முடியாத வகையில் 'ரிக்ரெட்' நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட நாட்களில் சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்கள் கூறியதாவது: தீபாவளி, பொங்கல் தினங்களில் இயக்கப்பட்டது போன்று முன்பதிவில்லா 'மெமு' ரயில்களை இயக்க வேண்டும்.
சென்னை - திருநெல்வேலி இடையே முன்பு இயக்கப்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலை சிறப்பு ரயிலாக இயக்கலாம் என்றனர்.