ADDED : பிப் 17, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி, : வஞ்சிநகரம் அருகே கல்லாங்காட்டில் 420 ஏக்கரில் சிப்காட் அமைக்க தமிழக தொழில்துறை அமைச்சகம் சார்பில் ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டது.
தற்போது அதற்கான அளவீடு செய்யும் பணிகள் நடக்கிறது. இப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் அழகு நாச்சி அம்மன் கோயில் முன்பு நேற்று கூடி ஆலோசித்தனர். அதில் 25 வழிபாட்டு தலங்கள், மேய்ச்சல் நிலம், 20 நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
அதனால் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கவும், இப்பகுதியை பாதுகாக்க 18 கிராம மக்கள் கூட்டமைப்பை உருவாக்க முடிவு செய்தனர்.

