/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் விவசாய கூட்டத்தில் தீர்மானம்
/
சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் விவசாய கூட்டத்தில் தீர்மானம்
சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் விவசாய கூட்டத்தில் தீர்மானம்
சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் விவசாய கூட்டத்தில் தீர்மானம்
ADDED : டிச 10, 2025 08:43 AM
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. விவசாயிகள் மணி, கிருஷ்ணன், கதிரேசன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாதத்தில் ஒரு நாள் நடக்கும் கூட்டத்திற்கு துறை அதிகாரிகள் மாறி மாறி வருவதால் விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. மேலவளவு வேப்பனேரி கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது.வெள்ளலூர் சின்னப்பிடி கண்மாய் நீர்வரத்து கால்வாயை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதால் அகற்ற வேண்டும். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். திருவாதவூரில் இடத்தில் குளமாகவும், வருவாய்த்துறை ஆவணத்தில் தரிசு என தவறுதலாக பதிவு செய்திருப்பதை மாற்றக்கோரி 11 ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை மாற்றவில்லை. பூதமங்கலம் கண்மாய்க்கு உரிய நேரடி கால்வாயை மராமத்து பார்க்க வேண்டும். கொங்கம்பட்டி கிராமத்தில் வளையங் கண்மாய் மணல் மேவியதால் கால்வாயை துார் வார வேண்டும் என்றனர்.

