/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க வெள்ளி விழா
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க வெள்ளி விழா
ADDED : நவ 24, 2025 07:09 AM
திருமங்கலம்: திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கிளையின் 25வது வெள்ளி விழா பேரவை கூட்டம் தலைவர் மகபூப் பாட்ஷா தலைமையில் நடந்தது. செயலாளர் ரகுநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை சமர்ப்பித்தனர். மாநில பொதுச்செயலாளர் மோகன், பொருளாளர் மாதவன், முன்னாள் தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட தலைவர் ராமானுஜம், தமிழ்நாடு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்க மாநில தலைவர் மூக்கையா பேசினர்.
ஓய்வூதியர்களில் 70 வயது நிரம்பியவர் களுக்கு 10 சதவீதம், 80 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். வெளியூர் பஸ்களுக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆலோசகர் பிலாவடியான் நன்றி கூறினார்.

