ADDED : செப் 20, 2024 05:33 AM
மதுரை : பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுரை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஸ்குவாஷ் போட்டிகள் மதுரை அரபிந்தோ மீரா பள்ளியில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் துவக்கி வைத்தார்.
ஆடவர் 14 வயது, 17, 19 வயது ஒற்றையர் பிரிவுகளில் மதுரை அரபிந்தோ மீரா பள்ளி மாணவர்கள் ஸ்ரீசரண், மோனிஷ், முகமது அமீன்ஷா, மகளிர் பிரிவில் பாலக் ஜெயின், விஷாலினி, ரித்விகா ஸ்ரீ முதலிடம் பெற்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவுகளில் ஸ்ரீசரண், நந்தா கிேஷார் ஜோடி, ஸ்ரீதர்ஷன், மோனிஷ் ஜோடி, முகமது அமீன்ஷா, யோகேஷ் ஜோடி முதலிடம் பெற்றனர். மகளிர் 14 வயது இரட்டையர் பிரிவில் பாலக் ஜெயின், கீர்த்தனா ஜோடி 2ம் இடம், 17, 19 வயதில் விஷாலினி, தீபிகா ஜோடி, ரித்விகா ஸ்ரீ, அழகுதர்ஷினி ஜோடி முதலிடம் பெற்றனர். ஆடவர் 14 வயது ஒற்றையர் பிரிவில் பாலமேடு அரசுப் பள்ளி யோகேஸ்வரன் 2ம் இடம், தியாகராஜர் மாடல் பள்ளி ஹரி 3ம் இடம், 17 வயது பிரிவில் லட்சுமி மெட்ரிக் பள்ளி ஹரீஷ் காமாட்சி 2ம் இடம், அலங்காநல்லுார் அரசுப் பள்ளி நிதிஷ் 3ம் இடம், 19 வயது பிரிவில் பாலமேடு அரசுப் பள்ளி சுந்தரேஸ்வரன் 2ம் இடம், தியாகராஜர் மாடல் பள்ளி சத்யதேவ் 3ம் இடம் பெற்றனர்.
14 வயது இரட்டையர் பிரிவில் பாலமேடு அரசு மாடல் பள்ளி யோகேஸ்வரன், அகிலேஷ் ஜோடி 2ம் இடம், தியாகராஜர் மாடல் பள்ளி ஹரி, சித்தார்த்தன் ஜோடி 3ம் இடம் பெற்றனர். 17 வயது பிரிவில் தியாகராஜர் மாடல் பள்ளி அபிராஜ், ஹரீத் மிருத்துன் ஜோடி 2ம் இடம், கருப்பாயூரணி அப்பர் பள்ளி சுதர்சன், மதியரசு ஜோடி 3ம் இடம் பெற்றனர். 19 வயது பிரிவில் பாலமேடு மாடல் பள்ளி சுந்தரேஸ்வரன், யுவராஜ் ஜோடி 2ம் இடம், தியாகராஜர் மாடல் பள்ளி சத்யதேவ், பால் பிரடெரிக் ஜோடி 3ம் இடம் பெற்றனர்.
மகளிர் 14 வயது ஒற்றையர் பிரிவில் பாலமேடு அரசுப் பள்ளி பவதாரிணி 2ம் இடம், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி சுபஸ்ரீ 3ம் இடம் பெற்றனர். 17 வயது பிரிவில் பாலமேடு அரசுப் பள்ளி இலக்கியா 2ம் இடம், 19 வயது பிரிவில் சவுராஷ்டிரா பள்ளி தேவதர்ஷினி 2ம் இடம், பாலமேடு அரசு மாடல் பள்ளி பாவனா 3ம் இடம் பெற்றனர். 14 வயது இரட்டையர் பிரிவில் பாலமேடு அரசு மாடல் பள்ளி பவதாரிணி, சாந்தினி ஜோடி முதலிடம், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி சுபஸ்ரீ, ஷிவானி ஜோடி 3ம் இடம் பெற்றனர். 17 வயது பிரிவில் பாலமேடு மாடல் பள்ளி இலக்கியா, கிருஷ்ணவேணி ஜோடி 2ம் இடம் பெற்றனர். 19 வயது பிரிவில் கருப்பாயூரணி அப்பர் பள்ளி தேன்மொழி, ருத்ரா ஜோடி 2ம் இடம் பெற்றனர்.