/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெப்பத்தில் கொதித்து மழையில் முளைத்திருந்த நெற்கதிர்கள் மதுரை வந்த மத்திய குழுவினரிடம் விவசாயிகள் வேதனை மதுரை வந்த மத்திய குழுவினரிடம் விவசாயிகள் வேதனை

ADDED : அக் 28, 2025 05:07 AM

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கட்டக்குளம் நெல் கொள்முதல் மையத்தை ஆய்வு செய்த மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோக மண்டல இயக்குனர் ராஜ் கிஷோர் ஷாகியிடம், வெப்பத்தால் நெல்லின் நிறம் மாறியும் மழையால் முளைத்திருப்பதையும் விவசாயிகள் காண்பித்தனர். அதிகாரிகள் நெல்லை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
மண்டல இயக்குநர் ராஜ் கிஷோர் ஷாகி, இந்திய உணவுக் கழக தர கட்டுப்பாட்டு மேலாளர் அய்யனார், தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிப கழக தர கட்டுப்பாட்டு மேலாளர் மணிகண்டன் ஆகியோர் மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் மையங்கள் நடக்கும் வாடிப்பட்டி கட்டக்குளம், ஆண்டிபட்டி மையங்களை நேற்று ஆய்வு செய்தனர்.
கட்டக்குளம் நெல்கொள்முதல் மையத்தில் எடையிடாமல் திறந்தவெளியில் குவித்திருந்த நெல்லை பாலித்தீன் பைகளில் சேகரித்தனர். மையத்தில் காத்திருந்த விவசாயிகள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
விவசாயி பிரசன்னகுமார் அதிகாரிகளிடம் கூறுகையில்,''உடனடியாக நெல்லை கொள்முதல் செய்யாததால், நெல்குவியலுக்குள் இருக்கும் வெப்பத்தை வெளியேற்றுவதற்காக ஒருநாள் விட்டு ஒருநாள் நெல்லை மேலிருந்து கீழாக கிளறி விடுகிறோம். கூலியாக ரூ.2000 வரை செலவாகிறது. அறுவடை செய்தோமோ விற்றோமோ என்றில்லாமல் மையத்தில் காலம் கழிக்கிறோம்'' என்றார்.
19 நாட்களாகி விட்டது பெண் விவசாயி காந்தி கூறுகையில்,''4 ஏக்கரில் நெல்லை அறுவடை செய்து, இங்கு கொட்டி வைத்து 19 நாட்களாகிறது.
நெல் குவியலுக்குள் வெப்பம் அதிகரித்து . போதாகுறைக்கு மழையால் நனைந்து 4 மூடை அளவுக்கு நெல் முளைத்து விட்டது.
நெல்லை கிளறுவதற்கு கூலியையும் சேர்த்தால் எங்களுக்கு நஷ்டம் தான் மிஞ்சுகிறது'' என்றார்.
மாநில அரசின் பிரச்னை மண்டல இயக்குனர் ராஜ் கிஷோர் ஷாகி கூறியதாவது: நெல்லை கொள்முதல் செய்யவில்லை என்பது மாநில அரசு சார்ந்த பிரச்னை. சரியான நேரத்தில் மையம் திறப்பதும், மற்ற வசதிகள் செய்ய வேண்டியதும் மாநில அரசு தான்.
நெல்லின் ஈரப்பதம் 17 சதவீத அளவுக்கு இருக்க வேண்டும். அதற்கேற்ப டிரையர் கருவிகள், வசதிகளை மாநில அரசு செய்துதரவேண்டும்.
நெல்லின் தரத்தை ஆய்வு செய்வது மட்டுமே எங்கள் வேலை. ஆய்வகத்தில் கொண்டு போய் நெல்லை ஆய்வு செய்தபின்பே எதுவும் கூறமுடியும். இயற்கை பேரிடரால் ஏற்படும் பிரச்னைகளின் போது தரத்தை சற்றே தளர்த்துவது தான் மத்திய அரசின் வேலை. மாநில அரசு, மத்திய உணவு கழகம், மத்திய அரசு இணைந்து தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.