/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திரை கவர்ச்சியில் தமிழ் இனம் விஜயை ஆதரிப்பவர்கள் மீது சீமான் கோபம்
/
திரை கவர்ச்சியில் தமிழ் இனம் விஜயை ஆதரிப்பவர்கள் மீது சீமான் கோபம்
திரை கவர்ச்சியில் தமிழ் இனம் விஜயை ஆதரிப்பவர்கள் மீது சீமான் கோபம்
திரை கவர்ச்சியில் தமிழ் இனம் விஜயை ஆதரிப்பவர்கள் மீது சீமான் கோபம்
ADDED : அக் 28, 2025 05:06 AM
மதுரை: ''திரை கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் தமிழ் இனம் விழிப்புற்று எழவேண்டும்'' என த.வெ.க., தலைவர் விஜயை ஆதரிப்பவர்கள் மீது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோபம் கொண்டார்.
மதுரையில் அவர் கூறியதாவது: முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர், கக்கன், காமராஜர் உள்ளிட்ட பெரும் அறிஞர்கள் ஆட்சி செய்த மண் இது.
நல்லாட்சி மலர போராடிக் கொண்டிருக்கும்போது, விஜயின் அரசியல், வேற பக்கம் திசை திரும்பி செல்கிறது. கல்வி, அரசியலை கற்பிக்கவில்லை. ஒழுக்கம் நெறிமுறைகளை கற்று தரும் கல்வியாக இல்லாமல், வியாபாரமாக மாறிவிட்டது. கலையை போற்ற வேண்டியதுதான், கலைஞர்களை பாராட்ட வேண்டியதுதான். நடித்தால் மட்டுமே நாட்டை ஆள தகுதி வந்துவிடும் என்ற நாட்டு மக்கள் எண்ணுகிறார்களே... அதுதான் கொடுமையான போக்கு.
நீங்கள்(விஜய்) நடிக்கும் போதும் நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு. இந்த நிலைப்பாட்டை தமிழ் சமூகம் ஏற்கிறதா. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடிப்பு இருக்கிறது. இந்த திரை கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் தமிழ் இனம் விழிப்புற்று எழவேண்டும். தோற்றுப்போன சமூகத்தில் தேவையற்ற செய்திகளை தலைப்புச் செய்திகளாக மாற்ற வேண்டாம். இவ்வாறு கூறினார்.

