தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நெல்லுக்கு அவசியம் நுண்ணுாட்டச் சத்து

நெல்லுக்கு அவசியம் நுண்ணுாட்டச் சத்து

நெல்லுக்கு அவசியம் நுண்ணுாட்டச் சத்து


UPDATED : நவ 06, 2026 07:24 PM

ADDED : நவ 06, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:24 PM ADDED : நவ 06, 2026 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: ‘‘நெல் வயல்களில் நுண்ணுாட்டச் சத்து இடுதல் மிகவும் அவசியம்’’ என திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் பெய்துவரும் மழைநீரை பயன்படுத்தி நெல் நடவு செய்யப்படுகிறது. அவ்வாறு நடவு செய்யும்போது மண்பரிசோதனை செய்து அதில் வழங்கப்படும் பரிந்துரைப் படி தழை, மணி, சாம்பல் சத்து உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரம் இடுதல் வேண்டும்.

ஆனால் விவசாயிகள் பெரும்பாலும் தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை மட்டுமே இடுகின்றனர். அது தவறு. பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் எவ்வளவு அவசியமோ, அதேபோன்று நுண்ணுாட்டச் சத்தும் அவசியம். இந்தச் சத்தில் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தாலும் அதுபயிர் வளர்ச்சி, மகசூலை பாதிக்கும்.

எனவே விவசாயிகள் ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணுாட்ட உரக்கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின்போது வயல் முழுவதும் சீராக தெளிக்க வேண்டும். இந்த நெல் நுண்ணுாட்டக்கலவை திருப்பரங்குன்றம் விரிவாக்க மையத்தில் மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us