/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அப்பள ஏற்றுமதியை பாதிக்கும் உளுந்து விலை
/
அப்பள ஏற்றுமதியை பாதிக்கும் உளுந்து விலை
ADDED : டிச 30, 2024 06:39 AM
மதுரை : 'உளுந்தின் விலை அப்பள உற்பத்தி, ஏற்றுமதியை நிர்ணயிக்கிறது' என தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன் தெரிவித்தார்.
நாட்டின் முக்கிய உற்பத்தி, ஏற்றுமதி பொருளாக அப்பளம் உள்ளது. தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.450 கோடி மதிப்பில் அப்பளங்கள் 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாட்டின் மொத்த அப்பள ஏற்றுமதியில், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 80 சதவீத ஏற்றுமதியைப் பெறுகின்றன. தற்போது ஆப்ரிக்க நாடுகள் அப்பள ஏற்றுமதிக்கு புதிய சந்தையாக உருவெடுத்து வருகின்றன.
தமிழகத்தில் அப்பள உற்பத்தி, ஏற்றுமதியில் மதுரை முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட அப்பள உற்பத்தி நிறுவனங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் அப்பளங்களின் ஆண்டு வணிக மதிப்பு ரூ. 300 கோடி.
இதுகுறித்து திருமுருகன் கூறுகையில், ''மதுரை அப்பளங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் தரம், சுவை காரணமாக உலகளவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அப்பள உற்பத்தியில் உளுந்து முக்கிய பொருளாக இருப்பதால் உளுந்து விலை உயர்வு, அப்பள உற்பத்தி செலவை அதிகரிக்கிறது. உளுந்து விலை நிலைத்தன்மை அப்பள உற்பத்தி, ஏற்றுமதிக்கு முக்கியமானது'' என்றார்.

