/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., சார்பில் எம்.பி.ஏ., தேர்வு இலவச பயிற்சி
/
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., சார்பில் எம்.பி.ஏ., தேர்வு இலவச பயிற்சி
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., சார்பில் எம்.பி.ஏ., தேர்வு இலவச பயிற்சி
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., சார்பில் எம்.பி.ஏ., தேர்வு இலவச பயிற்சி
ADDED : டிச 16, 2024 05:56 AM

மதுரை: மதுரையில் தினமலர், ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் சார்பில் எம்.பி.ஏ., படிக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு டான்செட், மேட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
மதுரைக் கல்லுாரியில் நடந்த இப்பயிற்சியை ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இயக்குனர் எம். சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசினார். பயிற்சிகள் காலை, மாலை என 2 கட்டங்களாக நடந்தன.
காலை அமர்வில் பால்சூஸ் சக்ஸஸ் அகாடமி பயிற்றுநர் சந்தோஷ் கணக்கு, ஆங்கிலம் பாடத்திலும், மதியம் அமர்வில் ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., உதவிப் பேராசிரியர் கார்த்திக் சுப்பு வணிக பகுப்பாய்வு பாடத்திலும் பயிற்சி அளித்தனர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இலவச மாதிரி வினாத்தாள் தொகுப்பு வழங்கப்பட்டது. பயிற்சியின் இடையே மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு விளக்கமளித்ததால் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். உதவிப் பேராசிரியர் செல்வம் நன்றி கூறினார்.