ADDED : அக் 27, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: தினமலர் செய்தி எதிரொலியாக திருநகர் மங்கம்மாள் சாலை சீரமைக்கப்பட்டது.
இந்த ரோட்டில் குடிநீர் குழாய்பதிக்க தோண்டிய பகுதி முழுமையாக சீரமைக்கப்படாமல் இருந்தது. ஏற்கனவே ரோட்டில் பல இடங்களில் அதிகளவில் பள்ளங்களும் இருந்தன.
சிலநாட்களாக பெய்து வரும் மழையால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்று மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். டூவீலரில் சென்றோர் விழுந்து காயமடைந்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து கவுன்சிலர் சுவேதா ஏற்பாட்டில் ரோடு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

