ADDED : ஜூலை 31, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விராதனுார் முதல் கொசவபட்டி வரை பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 285.85 லட்சத்தில் அமைக்கப்படும் தார் சாலை பணி, வலையபட்டியில் மாணிக்கம் தாகூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சத்தில் கட்டப்படும் சமுதாயக்கூடத்தை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.
சோளங்குருணியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.17.25 லட்சத்தில் கட்டப்படும் அங்கன்வாடி கட்டடம், விராதனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15வது நிதி குழு மானிய திட்டத்தில் ரூ.1.50 கோடியில் கட்டப்படும் கூடுதல் கட்டடம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார்.

