ADDED : ஜூலை 23, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்கம் சார்பில் பட்டை நாமம் இட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. சாலைப் பணியாளர்களுக்கு ஐகோர்ட் வழங்கிய சாதகமான தீர்ப்பை எட்டு மாதமாக அமல்படுத்தாமல், தமிழக அரசு மேல்முறையீடு செய்வதை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். கிளைத் தலைவர் ஜோதி மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.
செயலாளர் பாண்டியன் கோரிக்கை குறித்து விளக்கினார். மாநில துணைத் தலைவர் பரமேஸ்வரன் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நுார்ஜஹான், மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு, வணிகவரி பணியாளர் சங்க இணை செயலாளர் கல்யாணசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.