ADDED : ஆக 17, 2025 03:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா பர்னிச்சர் கடை வாட்ச்மேன் செல்வத்திடம் கடந்த வாரம் ரூ.7150 மற்றும் சில நாட்களுக்கு முன் அய்யங்கோட்டை நான்கு வழிச்சாலையில் டூவீலரில் வந்த கச்சைகட்டி சரவணனை வழிமறித்து தாக்கி ரூ.820ஐ டூவீலரில் வந்தவர்கள் வழிப்பறி செய்தனர்.
இதுதொடர்பாக சமயநல்லுார் சந்தோஷ்குமார் 19, பழைய விளாங்குடி முத்துமுகேஷ் 19, மதுரை ஆழ்வார்புரம் 18 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்களை வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், எஸ்.ஐ.,க்கள் கஜேந்திரன், திவ்யா கைது செய்தனர்.