UPDATED : நவ 01, 2026 08:21 PM
ADDED : நவ 01, 2026 08:16 PM

மதுரை: மதுரையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த ‘பதசஞ்சலன்’ எனும் அணிவகுப்பில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஆரப்பாளையம் கிராஸ் ரோடு திருமலை நாயக்கர் சிலை முன் தொடங்கிய அணிவகுப்பு பெத்தானியாபுரத்தில் முடிந்தது. இதனை மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிறுவனர் திருமாறன், வ.உ.சி., எழுச்சி மாநில நலச்சங்க நிறுவனர் அண்ணாமலை ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பெத்தானியாபுரத்தில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முத்துவிஜய பாண்டியன் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. திருவேடகம் ராமகிருஷ்ண தபோவனம் பரமானந்த சுவாமிகள் ஆசி வழங்கினார். மதுரை காமராஜ் பல்கலை பொருளியல் துறைத் தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., நகர் செயலாளர் ராஜா பேசினார். திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், கோச்சடை, ஆரப்பாளையம் பகுதிகளில் இருந்து திரளான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதேபோன்று அனுப்பானடியில் நடந்த அணிவகுப்பில் ஆதரவாளர்கள் கல்யாண சுந்தரம், பலராம், சதன் பாண்டியன் தலைமை வகித்தனர். கோட்ட துணைச் செயலாளர் பாலாஜி பேசினார். செல்லுார் நிகழ்வில் ஆதரவாளர்கள் மணிபாய் படேல், மாதவன் தலைமை வகித்தனர். தயாசங்கரானந்த சுவாமி ஆசி வழங்கினார். மாவட்ட தலைவர் மங்கள முருகன் பேசினார்.
