/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆர்.டி.ஓ., பேச்சு வார்த்தையிலும் தீர்வு கிடைக்காத போராட்டம்
/
ஆர்.டி.ஓ., பேச்சு வார்த்தையிலும் தீர்வு கிடைக்காத போராட்டம்
ஆர்.டி.ஓ., பேச்சு வார்த்தையிலும் தீர்வு கிடைக்காத போராட்டம்
ஆர்.டி.ஓ., பேச்சு வார்த்தையிலும் தீர்வு கிடைக்காத போராட்டம்
ADDED : நவ 12, 2024 05:15 AM
வாடிப்பட்டி: பரவையில் ஜாதிச்சான்று கேட்டு பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை நிறுத்த ஆர்.டி.ஓ., அளவில் பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
பரவை சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் ஜாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் பெற்றோர்களுடன் 5வது நாளாக பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மதுரை, திண்டுக்கல் மெயின் ரோடில் பவர் ஹவுஸ் எதிரே போராட்டத்தை தொடங்கினர். பல்வேறு கட்சி நிர்வாகிகள் போராட்டக் குழுவினரை சந்தித்து ஆதரவளித்து பேசினர். ஆர்.டி.ஓ., ஷாலினி போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
''பொதுமக்களுடைய மனுக்களை பரிசீலித்து அனுப்பியுள்ளேன். என்னுடைய முடிவு இறுதியானது அல்ல. தற்போது சான்று வழங்க எனக்கு அதிகாரம் இல்லை. எனவே கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம் என பலமுறை கூறியும், ஒருவர் தவிர வேறு யாரும் மேல்முறையீடு செய்யவில்லை'' என தெரிவித்தார்.
மாணவர்களோ, ''எங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்காவது காட்டுநாயக்கர் ஜாதி சான்று வழங்க வேண்டும். இல்லையேல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை'' எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். மாலையில் போராட்ட குழு தலைவர் வீராங்கன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு பேச்சு வார்த்தைக்கு சென்றனர். இப்போராட்டத்தால் இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.