தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஊரக வேலைவாய்ப்பு தாமதமாகும் ஊதியம்

ஊரக வேலைவாய்ப்பு தாமதமாகும் ஊதியம்

ஊரக வேலைவாய்ப்பு தாமதமாகும் ஊதியம்


UPDATED : அக் 22, 2026 04:58 PM

ADDED : அக் 22, 2026 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 04:58 PM ADDED : அக் 22, 2026 04:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழகத்தில் நுாறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் ‘வி.பி.ஜி. ராம் ஜி’ திட்டம் என்ற பெயருடன் 125 நாள் வேலை திட்டமாக நடக்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் முறையே 60:40 என்ற வீதத்தில் நிதி ஒதுக்குகின்றன.

இத்திட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவில் உள்ள உதவி பொறியாளர்கள், ஏ.பி.டி.ஓ.,க்கள், உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், மாவட்ட அளவில் உதவி செயற்பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு திட்டத்திற்கு ஒதுக்கும் தொகையில் இருந்தே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அது மாத இறுதியிலோ, துவக்கத்திலோ வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி, அல்லது அதற்கு பின்போ வழங்கப்படுகிறது.

இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தால் ஒன்றிய அளவில் செயல்படும் மாநில அரசின் திட்ட நிதிக்குழு உட்பட பிற திட்டங்களுக்கான தொகையை பயன்படுத்தும்படி கூறுகின்றனர். பல ஒன்றியங்களில் அத்திட்டங்களிலும் நிதியின்றி உடனுக்குடன் ஊதியம் வழங்க முடியவில்லை. இதனை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சரிசெய்ய வேண்டும் என ஊழியர்கள் புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us