/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொது சேகரிப்பு மையத்தில் விளைபொருட்கள் விற்பனை
/
பொது சேகரிப்பு மையத்தில் விளைபொருட்கள் விற்பனை
ADDED : ஆக 15, 2025 02:51 AM
மதுரை:வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் மதுரை மாங்குளம் பொது சேகரிப்பு மையம் மூலம் முதன்முறையாக விவசாயிகளின் விளைபொருட்களுக்கான வர்த்தகம் நடந்தது.
விவசாயி தமிழரசனின் 17 டன் அக் ஷயா ரக நெல், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ - நாம்) கீழ் ரூ. 5.67லட்சத்திற்கு விற்கப்பட்டது.
துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் உலர் களத்துடன் கூடிய தரம்பிரிப்பு கூடங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. தவிர சாலை வசதியுடன் கூடிய கிராம மந்தைகள், திடல்கள் என 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றை பொது சேகரிப்பு மையங்களாக அறிவித்துள்ளோம்.
மாங்குளத்தில் உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடத்தை பொது சேகரிப்பு மையமாக தேர்வு செய்துள்ளோம். இங்கு நெல்லை உலர்த்தலாம். சரியான வியாபாரிகளை கண்டறிந்து விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெற்றுத் தருகிறோம் என்றார்.