ADDED : செப் 22, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. லட்சுமி விநாயகருக்கு அபிேஷகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராம சுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நரிமேடு காட்டுப் பிள்ளையார் கோயிலில் அர்ச்சகர் கோபி, மீனாட்சி சுந்தரம் பூஜைகளை செய்தனர். கண்காணிப்பாளர் சந்திரசேகர், வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கீழப்பனங்காடி வரசித்தி விநாயகர் கோயிலில் ஐயப்பன் குருக்கள் தலைமையில் யாகம், பூஜைகள் நடந்தன. திலகா குசலவன், அனிதா லட்சுமணன் சோமசுந்தரம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.