நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை (ஐ.சி.டி.எஸ்.,) ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட மாநாடு தலைவர் மஞ்சுளா தலைமையில் நடந்தது.
இணைச் செயலாளர் அங்காள ஈஸ்வரி வரவேற்றார். துணைத் தலைவர் வேளாங்கண்ணி, இணைச் செயலாளர் பூணம் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் வாசுகி சிறப்புரையாற்றினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் கவிதா நன்றி கூறினார்.
செயலாளர் பரஞ்ஜோதி, மாவட்ட செயலாளர் மேனகா, அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், சுகாதார போக்குவரத்து துறை சங்க முன்னாள் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.