/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதச்சார்பின்மையை பிரதிபலிக்கும் சங்க இலக்கியங்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி பேச்சு
/
மதச்சார்பின்மையை பிரதிபலிக்கும் சங்க இலக்கியங்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி பேச்சு
மதச்சார்பின்மையை பிரதிபலிக்கும் சங்க இலக்கியங்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி பேச்சு
மதச்சார்பின்மையை பிரதிபலிக்கும் சங்க இலக்கியங்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி பேச்சு
UPDATED : டிச 20, 2025 08:12 AM
ADDED : டிச 20, 2025 05:26 AM

மதுரை: சங்க கால இலக்கியங்கள் மதச்சார்பின்மையைபிரதிபலிக்கும் வகையில், 'எம்மதமும் சம்மதம்' என்ற கருத்துக்களை வலியுறுத்துகின்றன என மதுரையில் நடந்த தமிழ் இசை விழாவில் ஓய்வுபெற்றஉயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் பேசினார்.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தமிழ் இசைச் சங்கத்தின் 51ம் ஆண்டு விழா நேற்று தொடங்கி டிச.24 வரை நடக்கிறது. ஓய்வுநீதிபதி சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நாடக கலைஞர் டி.வி.வரதராஜனுக்கு முத்தமிழ் பேரறிஞர் பட்டமும், பொற் கிழியும் வழங்கினார்.
அவர் பேசியதாவது: நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியால் தமிழ் மொழி காணாமல் போய்விடுமோ என்ற கடினமானகாலகட்டத்தில்,1943ல் ராஜா அண்ணாமலை செட்டியார் தமிழிசைச் சங்கத்தை தொடங்கினார்.
1944ல் அவர் எழுதிய கடிதத்தில், கூத்த பிரானை வணங்குவேன்; சங்கம் என்றுமே வளர வேண்டும் என சங்கத்தின் மீது அவர் கொண்ட பற்று புலனாகிறது.
தமிழிசை மன்றம் மூலம் நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மருத்துவ செலவையும் ஏற்று, தமிழிசைச் சங்கம் சமூக பணியையும் மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. சங்க கால இலக்கியங்கள் மதச்சார்பின்மை பிரதிபலிக்கும் வகையில், எம்மதமும் சம்மதம் என்ற கருத்துக்களை வலியுறுத்துகின்றன என்றார்.
சங்க அறங்காவலர்கள் மோகன்காந்தி, ராமசாமி, பொருளாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் இசை விழாவின் இரண்டாம் நாளான இன்று(டிச.20) மாலை 6:30 மணிக்கு ஸ்ருதி குழுவினரின் அக்னிப்பிரவேசம் நாடகம் நடக்கிறது.

