/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிராமப்பணிகளைத் தவிர மாற்றுப்பணி வேண்டாம் சங்க துணைத்தலைவர் வலியுறுத்தல்

ADDED : ஆக 04, 2025 04:59 AM
மதுரை: ''கிராம உதவியாளர்களுக்கு கிராமப் பணிகளைத் தவிர மாற்றுப் பணி வழங்கக் கூடாது,'' என, மதுரையில் தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மாரியப்பன் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது: கிராமங்களில் பல்வேறு பணிகளுக்கிடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து அரசுக்கு தகவல் சொல்வது, ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக பணிபுரிந்து புதிய வாக்காளர்களை சேர்ப்பது, முகவரி மாறியவர்களை நீக்குவது, புறம்புகளில் உள்ள மரங்கள், கனிம வளங்களை பாதுகாப்பது, அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என அடிப்படை பணியாளர்களாக கிராம உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் அனைத்து பணிகளையும் அவர்கள் செய்கின்றனர். பல்வேறு பணிச் சுமைகளுக்கு இடையே குறைந்த ஊதியத்தில் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்களுக்கு, 'கிராமப் பணியைத் தவிர மாற்றுப் பணி வழங்கக் கூடாது' என வருவாய் நிர்வாக கமிஷனர் உத்தரவிட்டார்.
அதற்கு எதிராக துணை கலெக்டர் உத்தரவு வழங்கியிருப்பது கிராம உதவியாளர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறோம் என்றார்.