நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மண்டலத்தை பசுமையாக மாற்றும் முயற்சியாக இளம் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு கோடி மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நகர், புறநகர் பகுதிகளில் தினமும் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
11வது நாளான நேற்று (செப். 27) கிழக்கு ஊராட்சி புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்வில் ஊராட்சி தலைவர் இந்திரா அழகுமலை, இயக்கத்தின் நிறுவனர் சோழன் குபேந்திரன், பொது மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.