தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/விளைநிலம் காப்போம் இயக்க முகாம்

விளைநிலம் காப்போம் இயக்க முகாம்

விளைநிலம் காப்போம் இயக்க முகாம்


UPDATED : அக் 22, 2026 07:29 PM

ADDED : அக் 22, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 07:29 PM ADDED : அக் 22, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: வேளாண் துறையின் விளைநிலம் காப்போம் இயக்க முகாம் நவ. 30 வரை மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களில் நடக்கிறது.

வேளாண் இணை இயக்குநர் ராணி கூறியதாவது: முகாமில் பசுமை அமோனியா, உயிரியல் இடுபொருட்களின் பயன்பாட்டை அதிகரித்தல், நீர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, பயிர் பல்வகைப்படுத்தல், ஊடுபயிர் சாகுபடி மற்றும் பொருத்தமான பயிர்களை பயன்படுத்த ஆலோசனை வழங்கப்படுகிறது. பயறு வகைகளின் சாகுபடியை ஊக்குவித்தல், விவசாயிகளுக்கான அடையாள அட்டைகளை உருவாக்குதல், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு செய்யப்படுகிறது என்றார்.

வாடிப்பட்டி குட்லாடம்பட்டியில் வேளாண்மை துணை இயக்குநர் மேரி ஐரின் ஆக்னிட்டா தலைமையிலும், சக்கிமங்கலம் சவுராஷ்டிராபுரத்தில் வேளாண்மை, தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர்கள் பாலமுருகன், பரமேஸ்வரன் தலைமையிலும் முகாம்கள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us