ADDED : பிப் 18, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டி.கல்லுப்பட்டி யூனியன் பாப்பையாபுரத்தில் குடிநீர் பைப் சரி செய்வதற்காக 6 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்தது.
இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் பலமுறை மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி- - ராஜபாளையம் ரோட்டில் நேற்று காலை காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசத்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

