ADDED : ஜூன் 17, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை நகர் தமிழ்நாடு மின்அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் மின்அமைப்பாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.
தலைவர் மாதவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சுப்ரமணியன், சதீஷ்கண்ணன், துணைச் செயலாளர்கள் சதாம் உசேன், ஜேம்ஸ் முன்னிலை வகித்தனர். செயலாளர் அபுதாகீர் வரவேற்றார். பொருளாளர் பாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், ஆதீஸ்வரன், சுப்ரமணி, தங்கராஜ் பங்கேற்றனர். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணங்கள் வழங்கப்பட்டன.