ADDED : நவ 28, 2024 05:32 AM
பாடம் நடத்திய கல்லுாரி மாணவர்கள்
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு வழிகாட்டுதல்படி பேராசிரியர்கள் கோதைக்கனி, வீரபாண்டி, ஆண்ட்ரியா, ரதி, பீலா, ஹரி விஷ்ணு மேற்பார்வையில், கல்லுாரி ரோட் ரைட் கிளப் மாணவர் தலைவர் கிஷோர், செயலாளர் பாஹித், பொருளாளர் தாட்சாயினி தலைமையில் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தியதுடன் உயர்கல்வியின் இலக்கு, லட்சியம் குறித்து விளக்கம் அளித்தனர். கிளப் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் ஏற்பாடு செய்தார்.
அரசியல் சாசன தின விழா
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரி என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. சார்பில் இந்திய அரசியல் சாசன தின விழா நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேசன், முதல்வர் ஸ்ரீனிவாசன், வணிகவியல் துறை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் துரைச்சாமி பேசினர். இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது. முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி ரூபிணி முதல் பரிசு, ரம்யா 2ம் பரிசு பெற்றனர். என்.சி.சி., பொறுப்பாளர் மணிகண்டன், என்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் குணசீலன், செந்தில்குமார், பொன்ராஜ், விஷ்ணு பிரியா, ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.