sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்


ADDED : டிச 21, 2024 05:14 AM

Google News

ADDED : டிச 21, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர்களுக்கு பாராட்டு

மதுரை: திரு.வி.க., மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் திருச்சியில் நடந்த பாரதியார் தின பூப்பந்து குழு விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தனர்.

இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சுழற்கோப்பையுடன் மேயர் இந்திராணி, கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோரை சந்தித்தனர். அவர்களை மேலும் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற வேண்டும் என மேயர், கமிஷனர் ஊக்கப்படுத்தினர். மாநகராட்சி கல்வி அலுவலர் ரகுபதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், தலைமையாசிரியர் அன்புச்செல்வன், உடற்கல்வி இயக்குனர் கபிலன், உடற்கல்வி ஆசிரியர் நரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கு

கருமாத்துார்: அருளானந்தர் கல்லுாரியின் இயற்பியல் துறை, இந்திய வானியல் சங்கம் இணைந்து 'சூரியன் மற்றும் ஹெலியோஸ்பியரில் துகள்கள் வேகமூட்டல்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. துறைத்தலைவர் சண்முகராஜூ வரவேற்றார்.

நாசா கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர் மூத்த விஞ்ஞானி கோபால்சுவாமி, அகமதாபாத் பிசிக்கல் ரிசர்ச் லேபோரட்டரி அஞ்சுகுமாரி, உதயபூர் சோலார் அப்சர்வேட்டரி புவன்ஜோசி, பிளானட்டரி ஆராய்ச்சி மையம் அகமதாபாத் சண்முகம், ஐ.ஐ.டி., கான்பூர் ரோஹித்சர்மா, நைனிடால் குமவுன் பல்கலை ரமேஷ்சந்திரா, இந்திய வானியல் கழக பெங்களூரு சசிகுமார், கொச்சின் அறிவியல், தொழில்நுட்ப பல்கலை அருண்பாபு ஆகியோர் சூரியன், விண்வெளி இயற்பியல், துகள்கள் வேகமூட்டலின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு கணினி அறிவியல் துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி கோபிகா வரவேற்றார். பயிற்சியாளர் கார்த்திகா பேசினார். மாணவி பத்மப்ரியா நன்றி கூறினார். துறைத் தலைவர் தேவிகா, பேராசிரியர்கள் சந்தியா, பாலப்பிரியா ஒருங்கிணைத்தனர்.

ரத்த தானம்

மதுரை: மதுரைக்கல்லுாரி, மதுரை சமூக சேவா சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி வாரிய செயலாளர் நடனகோபால், பொருளாளர் அனந்தஸ்ரீனிவாசன், சமூக சேவா சங்க தலைவர் கஸ்துாரி ரங்கன், கல்லுாரி வாரிய உறுப்பினர் அமுதன், முதல்வர் சுரேஷ், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பளர் நாகராஜன், சமூக ஆர்வலர் வெங்கடேஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி ஊழியர் தவமணி, அரசு மருத்துவமனை ராமசுப்ரமணியன் செய்திருந்தனர். நுாற்றுக்கணக்கான மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.

குழந்தை யாசகம் தடுக்கும் பயிற்சி

மதுரை: சமூக அறிவியல் கல்லுாரியில், தேசிய சமூக பாதுகாப்பு கமிஷன் சார்பில் குழந்தைகள் யாசகம் எடுப்பதை தடுப்பதற்கு பணிசெய்ய கூடிய நிறுவனங்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை இணை இயக்குநர் சூர்யகலா தலைமையில் நடந்தது.

அவர் பேசுகையில் குழந்தைகள் யாசகம் எடுப்பதை தடுக்கும் முயற்சியில் தொண்டு நிறுவனங்கள் பங்கு அதிகம். அவை ஆர்வத்துடன் முன்வரவேண்டும் என்றார். முதல்வர் ஜெயகுமார் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் சார்லஸ் நன்றி கூறினார்.

தமிழ்க்கூடல்

மதுரை: ஆ.புதுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி தலைமையாசிரியர் புதியாசலம் தலைமையில் நடந்தது. பி.டி.ஏ., தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மகேந்திரபாபு சிறப்புரையாற்றினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை பசுபதி நன்றி கூறினார்.

நுண்கலை விழா

மதுரை: பாத்திமா கல்லுாரியில் 'புது விடியலின் குரல்' என்ற தலைப்பில் நுண்கலை விழா முதல்வர் செலின் சகாயமேரி தலைமையில் நடந்தது. செயலாளர் இக்னேஷியஸ் மேரி பேசினார். சுயநிதிப் பிரிவு தலைவர் ரிஸ்வானா வரவேற்றார். மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. தன்னம்பிக்கை பேச்சாளர் கபிலா விசாலாட்சி பேசினார். வெற்றி குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை முதல்வர்கள் பாத்திமா மேரி, அருள்மேரி, டயானா கிறிஸ்டி, மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி லட்சுமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us