ADDED : மார் 29, 2025 05:27 AM
வாகை விழா
மதுரை: சிவகாசி நாடார் மீனாட்சி கல்லுாரியில் ஆங்கிலத்துறை சார்பில் வாகை விழா நடந்தது. முதல்வர் விசுமதி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை பேராசிரியை மெகர்நிஷா ஆண்டறிக்கை வாசித்தார். மாணவி அபிநயா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் ஜாஸ் பப்ளிக் பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி ஆற்றலை வெளிபடுத்தும் கருவி கல்வி 'என்ற தலைப்பில் பேசினார். போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். மாணவி சையதுஅலி பாத்திமா நன்றி கூறினார்.
'ஸ்பார்டன்' நிகழ்ச்சி
மதுரை: அமெரிக்கன் கல்லுாரியில் வரலாற்றுத் துறை சார்பில் ஸ்பார்டன் நிகழ்ச்சி துறைத் தலைவர் ஜெபராஜ் தலைமையில் நடந்தது. மாணவி சர்வதர்சினி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் லேடி டோக் கல்லுாரியின் வரலாற்றுத் துறை தலைவர் மெர்சி பாக்யம் பேசுகையில், மாணவர்கள் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். திறனை வளர்த்துக்கொண்டு, வரலாற்று துறை மாணவர்கள் பணியாற்ற நிறைய துறைகள் உள்ளன'என்றார். முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பங்கேற்றார். கலை நிகழ்ச்சி, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. மாணவர் முருகபெருமாள் நன்றி கூறினார்.
தென்னை சாகுபடி பயிற்சி
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி விவசாயத்துறை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற தங்கல் மற்றும் அனுபவத் திட்டத்தில் வாடிப்பட்டி விவசாயிகளுக்கு நெல், தென்னை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி கூட்டம் நடத்தினர். தோட்டக்கலைத்துறைத் தலைவர் ஆனந்தன், பயிர் நோயியல் துறை பேராசிரியை மாரீஸ்வரி, வாடிப்பட்டி வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் பாண்டி, தாமரைச்செல்வி நெல், தென்னை சாகுபடி தொழில்நுட்ப முறைகள் குறித்து விளக்கினர். விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடந்தது. மாணவிகள் கீர்த்தீஷ்வரி, கீர்த்தனாஸ்ரீ, கீர்த்தனா, கீர்த்தனாதேவி, கீர்த்தி, கிருபாஷினி, கோமளவள்ளி, கிருஷ்ணவேணி, லட்சுமி கணேஷ்வரி ஏற்பாடுகளை செய்தனர்.
மாணவருக்கு கல்வி உதவி
டி.கல்லுப்பட்டி: கொல்லவீரம்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி மகன் ஜோதிராகவ். மிகவும் வறிய நிலையில் இருந்த இவருக்கு கல்லுாரி செல்ல நண்பர்கள் வட்டாரம் அமைப்பின் சார்பில் உதவினர். மதுரை வேளாண் கல்லுாரியில் சேர்ந்து பயிலும் இம்மாணவருக்கு இந்தாண்டு நான்காவது செமஸ்டர் உதவித் தொகையாக ரூ.16 ஆயிரத்து 200 ஐ, அமைப்பின் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் விஜயபார்த்திபன் வழங்கினர்.
திறன் மேம்பாட்டு பயிற்சி
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை காம் கேப்ஸ் சங்கம் சார்பில் டிஜிட்டல் மீடியா தளம் என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி நாக கஜந்திகா வரவேற்றார். மாணவி அக் சயா அறிமுக உரையாற்றினர். டிஜிட்டல் துறை பயிற்சியாளர்கள் பேசினர். மாணவர் மருது நன்றி கூறினார். துறைத் தலைவர் நாகசுவாதி, உதவி பேராசிரியர்கள் திவ்யசிந்து, தேன்மொழி, சுப்பிரமணியராஜா ஒருங்கிணைத்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லூரி வணிகவியல் துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும், பெண்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காகவும், காவல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் மகளிர் ஸ்டேஷன்இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, எஸ்.ஐ.,க்கள் முத்துவேல், வளர்மதி பேசினர். பேராசிரியர்கள் ஞானேஸ்வரன், ராம்பிரசாத், ஒருங்கிணைத்தனர்.
விளையாட்டு விழா
மேலுார்: அரசு கல்லுாரியில் 2024- - 25ம் கல்வி ஆண்டுக்கான விளையாட்டு விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. வேதியியல், பொருளியல் துறை இணை பேராசிரியர்கள் மகேஷ் குமார், தாஹிராபானு வரவேற்றனர். முதல்வர் அந்தோணி செல்வராஜ் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வித்துறை தலைவர் ரமேஷ், தடகள போட்டிகளில் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்ற பிரபாகரன், கிருஷ்ணவேணி, சவுமியாவிற்கும் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கினார். ஆங்கில துறை மாணவி மங்கையர்க்கரசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கணிதத்துறை இணை பேராசிரியர் பழனிவேல் ராஜன் நன்றி கூறினார்.
விழிப்புணர்வு பேரணி
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரி பொருளியல் துறை, சென்னை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆராய்ச்சி நிறுவன சுகாதாரப் பொருளியல் துறை தலைவர் முனியாண்டி துவக்கி வைத்தார். தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன மதுரை பிரிவு டாக்டர் மகேஷ் குமார் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை பொருளியல் துறை உதவி பேராசிரியர்கள் சதீஷ்பாபு, அருள்மாறன், தினகரன், அசோக்குமார், சாமிநாதன் செய்திருந்தனர்.
கல்லுாரி ஆண்டு விழா
எழுமலை: மல்லப்புரம் திருவள்ளுவர்கலை, அறிவியல் மகளிர் கல்லுாரி ஆண்டுவிழாவில் முதல்வர் செல்வக்குமாரி ஆண்டறிக்கை வாசித்தார். நிறுவனர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் ராமராஜ், சுப்பிரமணி, பெருமாள், சென்னக்கிருஷ்ணன், லோகநாதன், செல்வராஜ், முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் அத்திபட்டி ராமையா நாடார் பள்ளி தலைமையாசிரியர் முத்தழகு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். நிர்வாக அலுவலர் சந்திரன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் கருப்பசாமி, பாலிடெக்னிக் முதல்வர் சுபாராஜன், மெட்ரிக் பள்ளி முதல்வர் தனபாக்கியம், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
புதிய திட்டங்கள் கண்காட்சி
மதுரை: எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் புதிய திட்டங்கள்' எனும் தலைப்பில் கண்காட்சி முதல்வர் துரைராஜ், துணை முதல்வர் சம்பத், மதுரை குழு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மதுரை அண்ணா பல்கலை பேராசிரியர் அருண் பங்கேற்றார். நிகழ்வை துறைத் தலைவர்கள் விமலா ராணி, தார்சிஸ் ஒருங்கிணைத்தனர். கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு, பசுமை தொழில்நுட்பம் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட புதிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
பரிசோதனை முகாம்
உசிலம்பட்டி: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரியில் அரைஸ் விரிவாக்கத்துறை, உன்னத் பாரத் அபியான், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை மாவட்ட பார்வையிழப்புத் தடுப்புச் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. அரைஸ் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் வரவேற்றார். முதல்வர் அன்பரசு, அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோணிசாமி, அரைஸ் ஆலோசகர் லாசர், இணை முதல்வர் சுந்தரராஜ் பங்கேற்றனர். திரளான கிராம மக்கள் முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டனர். அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் முருகேசன், திட்ட அலுவலர் ஜான்சன் ஸ்டீபன் நன்றி கூறினர்.