ADDED : ஜூலை 03, 2025 03:31 AM
மாணவர் சங்கம் துவக்க விழா
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வேதியியல் துறை சார்பில் கெம் ஸ்பெக்ட்ரா மாணவர் சங்கம் துவக்க விழா நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராம சுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். வேதியியல் துறை தலைவர் லட்சுமி கிருத்திகா வரவேற்றார். மாணவி பாண்டி பிரியா அறிமுக உரையாற்றினார். திருச்சி மேன் கைன்ட் பார்மா சயின்டிபிக் எக்சிகியூட்டிவ் பூலோக கிருஷ்ணன் பேசினார். மாணவி ராஜேஸ்வரி நன்றி கூறினர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இலவச மருத்துவ முகாம்
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி என்.எஸ்.எஸ்., லயன்ஸ் கிளப் ஆப் மதுரை ஹோஸ்ட், மேக்ஸ் விஷன், பி.ஜி.எம்., ஆஸ்பத்திரி இணைந்து பொது மருத்துவ முகாம், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் கல்லுாரியில் நடந்தது. மதுரை ஹோஸ்ட் லயன்ஸ் கிளப் நிர்வாகி ஆதிலட்சுமி தலைமை வகித்தார். செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். தலைவர் பன்சிதர், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர். ஹோஸ்ட் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கிரிதரன், வெங்கடேஷ்பாபு, மணிகண்டன், முன்னாள் தலைவர் ராம்குமார் பங்கேற்றனர். 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கல்லுாரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் குணசீலன், விஷ்ணு பிரியா, செந்தில்குமார், பொன்ராஜ், ராஜேஷ் கண்ணன் ஒருங்கிணைத்தனர்.