sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்


ADDED : ஜூலை 29, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழிப்புணர்வு ஊர்வலம் சோழவந்தான்: விவேகானந்தா கல்லுாரி சார்பில் 'போதையில்லா தமிழகம்' திட்டத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். துணை முதல்வர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ரெட் கிராஸ், ரெட் ரிப்பன் கிளப் மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று உறுதிமொழி ஏற்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், அருள்மாறன், கண்ணன், வடிவேல், வடிவேல் ராஜா, என்.சி.சி., கேப்டன் ராஜேந்திரன் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முருகன், ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் சதீஷ்பாபு, கணபதி ஏற்பாடு செய்தனர்.

ரத்ததான முகாம் திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம், அரசு மருத்துவமனை, மதுரை ஜெயின்ஸ் கிளப், லயன்ஸ் கிளப் ஆப் அரிஸ்டோ சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. தலைவர் விஜயராகவன் துவக்கி வைத்தார். முதல்வர் ராம சுப்பையா, பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். கல்லுாரி விரிவாக்க செயல்பாடு முதன்மையர் சிலம்பரசன் வரவேற்றார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்தம் வழங்கினர். செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஜெபராஜ், பேராசிரியர் லிங்கேஸ்வரி ஒருங்கிணைத்தனர்.

மாணவர்களுக்கு இலவச சீருடை மதுரை: புதுார் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மனிதநேய மன்றம் பொது அறக்கட்டளை சார்பில் சீருடைகள் வழங்கும் விழா நடந்தது. நிறுவனர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஷேக்நபி முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் கவிஞர் ரவி, சிறிய புஷ்பம், எஸ்தர் ராணி, சந்திரிகா, இஸபெல் திலகராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர்.

எஸ்.எம்.சி., கூட்டம் மதுரை: மேற்கு ஒன்றியம் வீரபாண்டி அரசு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (எஸ்.எம்.சி.,) கூட்டம் தலைவர் பத்மாஸ்ரீ தலைமையில் நடந்தது.தலைமையாசிரியர் செல்வகுமரேசன் வரவேற்றார். மாநில கற்றல் அடைவு ஆய்வு, எண்ணும் எழுத்தும் திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. முன்னாள் மாணவர்கள் நன்கொடை விவரம் வலை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. வீரபாண்டி பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத கிராமமாக மாறியதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி, உயர்கல்வி வழிகாட்டி, போக்சோ சட்டம், வாழ்வியல் திறன்களை மேம்படுத்தல், மணற்கேணி செயலி பயன்பாடு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்பட்டது. ஆசிரியர் ஜேக்கப் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us