sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி கல்லுாரி செய்திகள்

/

பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்


ADDED : அக் 09, 2024 04:35 AM

Google News

ADDED : அக் 09, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரத்த தான முகாம்


திருநகர்: ஜெயின்ஸ் குரூப், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ். எஸ்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு, ஜெயின்ட்ஸ் குரூப் தலைவர் நடராஜன், செயலாளர் மரகதசுந்தரம் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் குருசாமி, கிருஷ்ணசாமி, ராமலிங்கம், கிருஷ்ணன், ஆனந்த செல்வராஜ், லட்சுமணன் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு 101 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.

பட்டமளிப்பு விழா


மதுரை: யாதவர் மகளிர் கல்லுாரியில் 40வது பட்டமளிப்பு விழா தலைவர் அருண் போத்திராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் இந்திராணி முன்னிலை வகித்தார். முதல்வர் புஷ்பலதா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர் கலா பேசுகையில், பெண் கல்வியால் தான் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும். பெண்கள் படிப்பதால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மனஉறுதியுடன் செயல்பட முடியும். உலகத்தை நன்கு புரிந்துகொள்ள பெண்களுக்கு கல்வி அவசியம். பெண்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குபவர்களாக ஜொலிக்க வேண்டும் என்றார். 930 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் போத்தி கோபால கிருஷ்ணன், போத்திராஜா, துணை முதல்வர் சிவகாமசுந்தரி, டீன் இந்திராணி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வித்யா, நிர்வாக அதிகாரி சுந்தரராஜன், பி.ஆர்.ஓ., கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேச்சுப்போட்டியில் பரிசு


மேலுார்: பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றி பயணம் அமைப்பின் சார்பில் வள்ளலாரின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடந்தது. அமைப்பின் நிறுவனர் சூர்யா வரவேற்றார் சேக்கிபட்டி, மதுரை இளங்கோ, செம்மேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் துர்கா, சுதானந்தன், ராஜாராம் முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.

சிறப்பு பரிசுகளை சேக்கிபட்டி, ஒத்தக்கடை அரசு பள்ளி மாணவர்கள் பெரியசவுளி, பாக்கியலட்சுமி, கோபிகா வென்றனர். போட்டி போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டு கல்வி இயக்கம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் கர்ணன், தமிழர் முன்னணி பொது செயலாளர் இமயம் சரவணன், கல்வி விழிப்புணர்வு இயக்க பேராசிரியர் மணியன், தமிழ் ஆர்வலர் கதிர்நம்பி, நிர்வாகிகள் தங்கம் அடைக்கண், கல்லணை சுந்தரம் பரிசு வழங்கினர். அகாடமி தாளாளர் ஜீவா நன்றி கூறினார்.

பட்டமளிப்பு விழா


பரவை: மங்கையர்க்கரசி பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் தலைவர் அசோக் குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தார். முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். கேப்ஜெமினி நிறுவனத் துணைத் தலைவர் குருமூர்த்தி சேதுராமன் பல்கலை தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து துறை மாணவர்களுக்கும் பதக்கம் வழங்கினார்.

290 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், 'பொறியாளர்களே வருங்கால பாரதத்தின் துாண். நாட்டின் நலன் கருதி உயரிய சிந்தனையோடும், நேர்மையோடும், முனைப்புடனும், ஆற்றலுடனும் பாடுபட வேண்டும். நவீன தொழில்நுட்ப உலகில் திறம்பட பணிபுரிய புதிய விஷயங்களை அன்றாடம் கற்றுக் கொள்ள வேண்டும்' என்றார். ரெனால்ட் நிசான் இந்தியாவின் துணைத் தலைவர் ஈவா ஜேம்ஸ் பேசுகையில், 'மாணவர்கள் மனதை நிலையாக வைத்து சமுதாய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். மன உறுதியையும், சாதிக்கும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார். மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இலவச கண் பரிசோதனை


மதுரை: யாதவர் கல்லுாரியில் நாட்டுநலப் பணித்திட்டம், மேக்சின் விஷன் கண் மருத்துவமனை சார்பில் கல்லுாரி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முதல்வர் ராஜூ தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வீரபாண்டியன் வரவேற்றார். முன்னாள் செயலாளர் கண்ணன் துவக்கி வைத்தார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். டாக்டர் ராஜ்குமார் தலைமையில் பரிசோதனை நடந்தது. கல்லுாரி தலைவர் ஜெயராமன், துணை தலைவர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திட்ட அலுவலர் மாரியப்பன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us