நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் அடுத்துள்ள அ.தொட்டியபட்டியில் 1924ம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டு தற்போது உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் 101 வது ஆண்டு விழாவையொட்டி முன்னாள் மாணவர்கள் சீர்வரிசை வழங்கினர். வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணி, தலைமை ஆசிரியர் ஜெய்ராணி, உதவியாசிரியர் தமிழரசன், கிராம மக்கள், முன்னாள் மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.