/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாதுகாப்பான பஸ் பயணம் பள்ளி மாணவர்கள் உறுதி
/
பாதுகாப்பான பஸ் பயணம் பள்ளி மாணவர்கள் உறுதி
ADDED : மார் 25, 2025 04:49 AM

மதுரை: மதுரையில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதை 'பெருமையாக' கருதுகின்றனர். போலீசார் பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் திருந்துவதாக இல்லை.
இதுகுறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். போக்குவரத்து துணைகமிஷனர் வனிதா தலைமையில் போலீசார் நேற்று மணிநகரம் தொழிலாளர் நலப்பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பஸ்சில் தொங்கிக்கொண்டே செல்லக்கூடாது. கூட்டமாக இருந்தால் அடுத்த பஸ்சில் செல்ல வேண்டும். சக மாணவர்கள் தொங்கிக்கொண்டு சென்றால் அவர்களை அறிவுறுத்த வேண்டும். விபத்தில் சிக்கினால் பொருளாதார, உடல், மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என திலகர்திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி பேசினார். எஸ்.ஐ., லிங்க்ஸ்டன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.