/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் தெரு நாய்களின் கழுத்தை இறுக்கி கொன்ற பள்ளி மாணவர்கள்
/
மதுரையில் தெரு நாய்களின் கழுத்தை இறுக்கி கொன்ற பள்ளி மாணவர்கள்
மதுரையில் தெரு நாய்களின் கழுத்தை இறுக்கி கொன்ற பள்ளி மாணவர்கள்
மதுரையில் தெரு நாய்களின் கழுத்தை இறுக்கி கொன்ற பள்ளி மாணவர்கள்
ADDED : டிச 30, 2025 06:26 AM
மதுரை: மதுரை ஆரப்பாளையம் பகுதி யில் பள்ளி மாணவர்கள் ஆறு பேர், ஜாலிக்காக கேபிள் ஒயரால் தெரு நாய்களின் கழுத்தை இறுக்கி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, கால்நடைகளை பாதுகாக்கும், 'ப்ளூ கிராஸ்' அமைப்பினர் போலீசில் புகார் செய்தனர்.
மதுரை ஆரப்பாளையம் கண்மாய் கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து, மூன்று தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. ஒரே இரவில் இறந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஆறு சிறுவர்கள் கேபிள் 'டிவி' ஒயரால் துாங்கி கொண்டிருந்த நாய்களின் கழுத்தை இறுக்கி கொன்றது தெரிந்தது. அதிர்ச்சியடைந்தவர்கள் அந்த சிறுவர்களை தேடி பிடித்து விசாரித்தபோது, 'ஜாலிக்காக செய்தோம்' என்றனர்.
இவர்கள், 6 முதல், 9ம் வகுப்பு படித்து வருபவர்கள். இதில், ஆறு சிறுவர்களில் ஒருவரின் தாய் வளர்த்த நாயையும் இதே ஸ்டைலில் கொலை செய்துள்ளனர்.
தகவல் அறிந்த 'ப்ளூ கிராஸ்' அமைப்பைச் சேர்ந்த மயூர், மாணவர்கள் குறித்து கரிமேடு போலீசில் புகார் செய்தார். அவர் கூறுகையில், ''ஜாலிக்காக ஒரு உயிரை கொல்லும் மாணவர்களின் மனநிலை ஆபத்தானது.
சிறு வயதிலேயே இதுபோன்ற செய்கையில் ஈடுபடுபவர்கள் நாளை சமூகத்திற்கு ஆபத்தானவர்களாக மாறக்கூடும். இதை இப்போதே தடுக்க வேண்டும்,'' என்றார்.
போலீஸ் தரப்பில் கூறுகையில், 'விசாரணை நடக்கிறது. மாணவர்களுக்கு மனநல 'கவுன்சிலிங்' கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

