/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
50 கி.மீ., துாரத்தில் தேர்வு பணியா கொதிப்பில் பள்ளி ஆசிரியர்கள்
/
50 கி.மீ., துாரத்தில் தேர்வு பணியா கொதிப்பில் பள்ளி ஆசிரியர்கள்
50 கி.மீ., துாரத்தில் தேர்வு பணியா கொதிப்பில் பள்ளி ஆசிரியர்கள்
50 கி.மீ., துாரத்தில் தேர்வு பணியா கொதிப்பில் பள்ளி ஆசிரியர்கள்
ADDED : பிப் 21, 2025 05:51 AM
மதுரை: மதுரையில் பொதுத் தேர்வு பணிகள் 50 கி.மீ., துாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஒதுக்கப்படுவதாக முதுகலை ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தற்போதைய இருப்பிட முகவரியில் இருந்து 8 கி.மீ.,க்குள் பணி ஒதுக்க வலியுறுத்தியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 ல் துவங்கி 24 வரை நடக்கிறது. இதற்காக தேர்வுப் பணிக்கு ஆசிரியர்கள் ஒதுக்கீடு மூன்று நாட்களாக நடந்தது. 1400க்கும் மேற்பட்டோருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றியம் வாரியாக ஒதுக்கப்பட்ட இப்பணிகளில் பெரும்பாலானா ஆசிரியர்களுக்கு 50 கி.மீ., துாரத்திற்கு மேல் உள்ள பள்ளியில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்றியம்வாரியாக இதுபோல் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் பாண்டி கூறியதாவது: 8 கி.மீ.,க்குள் பணி ஒதுக்க வேண்டும் என்பது தேர்வுத்துறை உத்தரவு. முன்னுரிமை பட்டியல் வெளியிட கேட்டுக்கொண்டோம். அதன் அடிப்படையில் இரு மாதங்களுக்கு முன்பே சி.இ.ஓ., வெளியிட்டது வரவேற்கத்தக்கது. இருப்பினும் இந்தாண்டு தேர்வுப் பணி ஒதுக்கீட்டின்போது ஆசிரியர்களின் இருப்பிட முகவரியை கணக்கில் கொள்ளவில்லை. இதுகுறித்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
இதனால் பெத்தானியாபுரம் பகுதி ஆசிரியர்களுக்கு, 50 கி.மீ., தொலைவில் உள்ள எம்.கல்லுப்பட்டி உள்ளிட்ட தொலைதுார பள்ளிகளுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்ஆசிரியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். இது தேர்வுப் பணியை கேள்விக்குறியாக்கும். இதுபோல் ஒவ்வொரு ஒன்றியத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போதுள்ள இருப்பிடம் முகவரி அடிப்படையில் தேர்வு பணியை சி.இ.ஓ., ரேணுகாதேவி ஒதுக்க வேண்டும் என்றார்.