நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என்பதை கண்டறிய கருப்பாயூரணி இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையில் போலீசார் கடைகளில் ஆய்வு செய்தனர்.
வீரபாண்டி நகரில் ராமர் என்பவரின் பெட்டிக் கடையில் கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்கள் இருந்தன. அவர் மீது வழக்கு பதியப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரமோகன், எஸ்.ஐ.,க்கள் துரைமுருகன், பூமா ஆகியோர் ராமர் பெட்டி கடைக்கு நேற்று சீல் வைத்தனர்.

