/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செகந்திராபாத்-கொல்லம் ரயில் சேவை நீட்டிப்பு சங்கரன்கோவிலில் கூடுதல் நிறுத்தம்

ADDED : டிச 15, 2024 06:16 AM
மதுரை : சபரிமலை சீசனை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, செகந்திராபாத் - கொல்லம் இடையே மதுரை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதுடன், சங்கரன்கோவிலில் கூடுதல் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வியாழன் தோறும் இரவு 8:00 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் கொல்லம் சிறப்பு ரயில் (07175) மறுநாள் மாலை 6:10 மணிக்கு மதுரை, இரவு 8:00 மணிக்கு ராஜபாளையம், 8:30 மணிக்கு சங்கரன்கோவில்,9:10 மணிக்கு தென்காசி வழியாக சனிக்கிழமைஅதிகாலை 1:30 மணிக்கு கொல்லம் செல்லும்.
இந்த ரயில் ஜன. 16 வரை நீட்டிக்கப்படுகிறது.
சனிக்கிழமை தோறும் அதிகாலை 5:00 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் செகந்திராபாத் சிறப்பு ரயில் (07176) காலை 9:00 மணிக்கு தென்காசி, 9:45 மணிக்கு சங்கரன்கோவில், 10:18 மணிக்கு ராஜபாளையம், மதியம் 12:35 மணிக்கு மதுரை வழியாக மறுநாள் மதியம் 1:30 மணிக்கு செகந்திராபாத் செல்லும். இந்த ரயில் ஜன. 18 வரை நீட்டிக்கப்படுகிறது.
ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 8 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படும் இவ்விரு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.