/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆலோசனை கூட்டம்
/
தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆலோசனை கூட்டம்
தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆலோசனை கூட்டம்
தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 27, 2025 03:53 AM
மதுரை: மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக டி.ஜி.பி., (பொறுப்பு) வெங்கட்ராமன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்திலுள்ள சிலைக்கு அரசியல், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அக்., 30ல் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் மதுரை வந்து செல்வர்.
இதை முன்னிட்டு சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் டி.ஜி.பி., (பொறுப்பு) வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது. தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின் கோரிப்பாளையம், தெப்பக்குளம், முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடங்களை டி.ஜி.பி., (பொறுப்பு) வெங்கட் ராமன் ஆய்வு செ ய்தார்.
3 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போலீசார் கூறியதாவது: நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி வரும் பால்குடம், முளைப்பாரி ஊர்வலங்கள், முக்கிய தலைவர்கள் வருகை தொடர்பான பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வெளி மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக ராமநாதபுரம் பசும்பொன்னுக்கு வாகனங்களில் செல்வோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், வழித்தடங்கள், அதற்காக போலீசாரிடம் பெற வேண்டிய அனுமதிச் சீட்டு, சோதனை சாவடி போலீசார் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர், என்றனர்.
விழா தொடர்பாக தேவர் அமைப்பினர், பார்வர்டு பிளாக் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடந்தது.

