/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தண்ணீருக்காக தவம் கிடக்கும் நாற்றுகள் பி.எஸ்.கே., நிறுவனத்தில் வருமான வரி சோதனை
/
தண்ணீருக்காக தவம் கிடக்கும் நாற்றுகள் பி.எஸ்.கே., நிறுவனத்தில் வருமான வரி சோதனை
தண்ணீருக்காக தவம் கிடக்கும் நாற்றுகள் பி.எஸ்.கே., நிறுவனத்தில் வருமான வரி சோதனை
தண்ணீருக்காக தவம் கிடக்கும் நாற்றுகள் பி.எஸ்.கே., நிறுவனத்தில் வருமான வரி சோதனை
ADDED : அக் 25, 2024 05:30 AM

மேலுார்: ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 40 நாட்களாகியும் குழிச்செவல்பட்டிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
புலிப்பட்டி - குறிச்சிபட்டி வரை பெரியாறு ஒரு போக பாசனத்திற்கு செப்.15 ல் திறக்கப்பட்ட தண்ணீர் 12 வது பிரதான கால்வாய் வழியாக செல்கிறது. இதில் தனியாமங்கலத்தில் இருந்து 11 கால்வாய் வழியாக செல்லும் பாசன நீர் 10 கி.மீ., தொலைவில் உள்ள இ.மலம்பட்டி வரை செல்கிறது.
இக் கால்வாயில் செல்லும் தண்ணீரால் நேரடியாகவும், 5 கண்மாய்கள் மூலம் தண்ணீர் நிரம்பி அதன் மூலம் ஆயிரம் ஏக்கரும் பாசனம் பெறும். ஆனால் தண்ணீர் திறந்து 40 நாட்களாகியும் இதுவரை 11 வது கால்வாயில் தண்ணீர் வரவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.
அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வங்கியில் கடன் வாங்கி நாற்றுகள் பாவியுள்ளோம். இதுவரை தண்ணீர் வராததால் நாற்றுகளை பிடுங்கி நட முடியாமல் வயலில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. நாற்று பாவி 22 நாளில் நடவு செய்ய வேண்டிய நிலையில் இதுவரை நடாததால் நாற்றுகள் முற்ற ஆரம்பித்துள்ளது. இதனால் நெற் பயிரின் வளர்ச்சி பாதிப்பதோடு மகசூல் குறைவாகவே கிடைக்கும்.
அதிக நோய் தாக்குதல் ஏற்பட்டு உரச்செலவு 2 மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தண்ணீர் திறக்க கோரி பலமுறை வலியுறுத்தியும் நீர்வளத்துறை அதிகாரிகள் திறக்கவில்லை. கலெக்டர் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், தண்ணீர் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.