ADDED : செப் 22, 2024 03:37 AM
பேரையூர் : பேரையூர் தாலுகாவில் மானாவாரி நிலங்களில் விவசாயப் பணி நடந்து வருகிறது. தற்போது மழை பெய்ய வேண்டியபருவமென்பதால் நிலத்தை உழுது பண்படுத்தியுள்ளனர்.
இப்பகுதியில் சில ஆண்டுகளாக மழை பொய்த்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். குளம், கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.
விவசாயி ஆறுமுகம்: நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் இரைக்காகமயில்கள் நிலத்திற்கு வருகின்றன. அப்போது நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள விதைகளை இரையாக உண்டு வருவதால் மழை பெய்யாத சோதனையுடன் விதைகள் இரையாவது வேதனையாக உள்ளது.
மேலும் மழை பெய்து விதைகள் பயிராக வளர்ந்தால் மட்டுமே எவ்வளவு விதைகள் மயில்களுக்கு இரையானது என்பது தெரியவரும். இதில் பாதிக்கும் மேற்பட்ட விதைகள் தப்பித்து இருந்தால் மட்டுமே தற்போதைய விவசாயப்பணி பலன் கொடுக்கும். இல்லையெனில் மீண்டும் விதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார்.