/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் மருந்துகள் இல்லை நோயாளிகள் குமுறல்
/
மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் மருந்துகள் இல்லை நோயாளிகள் குமுறல்
மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் மருந்துகள் இல்லை நோயாளிகள் குமுறல்
மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் மருந்துகள் இல்லை நோயாளிகள் குமுறல்
ADDED : பிப் 15, 2024 05:38 AM

மேலுார்: திருவாதவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவத்தில் மருந்துகள் இல்லாததால் நோயின் தீவிரம் அதிகரித்துள்ளது.
இச்சுகாதார நிலையம் 1985 முதல் செயல்படுகிறது. இங்கு திருவாதவூர், பதினெட்டாங்குடி, பூஞ்சுத்தி உள்பட 90 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு செய்யும் பரிசோதனையில் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகம் உள்ளிட்ட 5 வகை பாதிப்புள்ளோர் கண்டறியப்படுவர்.
அவர்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் செவிலியர் நோயாளியின் வீடுகளுக்கு சென்று மருந்துகள் கொடுக்க வேண்டும். இந் நோய்களுக்கான மருந்துகளை மதுரையில் உள்ள மருந்து கிடங்கில் மாத்திரைகளை வாங்கி சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைப்பர். ஆனால் 3 மாதங்களாக அவ்வாறு மருந்துகள் வழங்கவில்லை.
கிருஷ்ணன்: ரத்தஅழுத்தம் இருப்பதால் மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் வீட்டில் வந்து பரிசோதனை செய்து மாத்திரைகள் ஏற்கனவே வழங்கினர். 2 மாதங்களாக வழங்கவில்லை. சுகாதார நிலையத்தில் கேட்டால், வீட்டில் மாத்திரை பெறுவோருக்கு, சுகாதார நிலையத்தில் மாத்திரை தரக்கூடாது என்று விதி உள்ளதாக கூறுகின்றனர். மாத்திரை கிடைக்காமல் நோயின் தன்மை அதிகரித்து வருகிறது. இதனை சுகாதார இணை இயக்குநர் ஆய்வு செய்து மருந்துகள் கொடுக்கவும், மக்களை தேடி மருத்துவம் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சுகாதார இணை இயக்குநர் குமரகுருபரன் கூறுகையில், ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் சரிவர மருந்துகளை கொடுக்காததால் அவர்களை மாற்றி, புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களின் முகவரியை கண்டறிய சிரமப்படுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்துகள் கிடைக்காதவர்கள் வட்டார மருத்துவ அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

