நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் 'புனைவிலிருந்து பிரதிபலிப்பு வரை தமிழவன் சிறுகதைகளின் சமகால வாசிப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராஜகோபால், தலைவர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். மையத் தலைவர் காயத்ரிதேவி வரவேற்றார். செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
பல்வேறு தலைப்புகளில் வெளிமாவட்ட பேராசிரியர்கள் பேசினர். பேராசிரியர்கள் தேவிபூமா, மல்லிகா ஒருங்கிணைத்தனர். பட்ட ஆய்வாளர்கள் மோனிகா யாழினி, கார்த்திக் ராஜா தொகுத்து வழங்கினர். பேராசிரியர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.

