/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முக்குலத்தோருக்கு தனி இடஒதுக்கீடு: பா.ம.க.,
/
முக்குலத்தோருக்கு தனி இடஒதுக்கீடு: பா.ம.க.,
ADDED : அக் 31, 2025 02:46 AM
மதுரை:  தமிழகத்தில் முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.,மணி தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு  மாலை அணிவித்த அவர் கூறுகையில், விடுதலைக்காக போராடியவரும், தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசிய பெருமையும் முத்துராமலிங்க தேவருக்கு உண்டு. இளைஞர்களிடம் ஆன்மிகத்தை கொண்டுசேர்த்தவர். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினருக்கும் தனித்தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.
ஜன.,9ல் கூட்டணி முடிவு தே.மு.தி.க., தே.மு.தி.க., இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விஜயபிரபாகரன் கூறுகையில், கடலுாரில் ஜன.,9 ல்  கட்சி மாநாடு நடக்கிறது. அப்போது சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

