UPDATED : அக் 21, 2026 05:46 PM
ADDED : அக் 21, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்பிற்கு என தனி வார்டு ஒதுக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது மாத்திரை வழங்கும் இடத்தருகே சிறிய அறையில் இம்மையம் செயல்படுகிறது. இ.சி.ஜி., எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு அந்தந்த இடத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கவே தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறுகையில், ‘‘பழைய மகப்பேறு வார்டு பகுதியை தேர்வு செய்துள்ளோம். ஒரே இடத்தில் ரத்தப்பரிசோதனை முதல் புற்றுநோய் பரிசோதனை வரை செய்யப்படும். மறுநாள் பரிசோதனை முடிவுகள் தரப்படும்’’ என்றார்.
