தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தயாராகும் குன்றத்து சஷ்டி மண்டபம்

தயாராகும் குன்றத்து சஷ்டி மண்டபம்

தயாராகும் குன்றத்து சஷ்டி மண்டபம்


ADDED : ஆக 21, 2025 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்களுக்காக கட்டப்படும் மண்டபத்தில் இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடக்கும் 6 நாட்களும் பெண் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்கள், வளாகத்திலுள்ள சஷ்டி மண்டபம், வள்ளி, தேவசேனா மண்டபங்களில் தங்கி விரதமிருப்பர். தினமும் காலை, மாலையில் சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் வருவர்.

ஆண்டுக்கு ஆண்டு சஷ்டி விரதமிருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்கள் தங்குவதற்காக பாலாஜி நகர் பகுதியில் ரூ.4.50 கோடியில் புதிய சஷ்டி மண்டபத்தை கோயில் நிர்வாகம் கட்டி வருகிறது. பார்க்கிங், சுற்றுச்சுவர், கழிப்பறைகள் போன்ற வசதிகளுடன் இறுதிகட்ட கட்டுமான பணி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us