/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிமன்ற வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்
/
நீதிமன்ற வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்
ADDED : நவ 27, 2025 07:18 AM
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் படை போலீஸ்காரர் மகாலிங்கம், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல்படை போலீஸ்காரர் மகாலிங்கம், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் என்பது தெரியவந்தது.
தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு தனக்கு தானே துப்பாக்கி சுட்டுக்கொண்டு மகாலிங்கம் உயிரிழந்துள்ளார். அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கூறியிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

