/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆடு, மாடு வளர்க்க புதிய கட்டணம் வசூலிப்பதை நிறுத்திப்புட்டாங்கோ: எதிர்ப்பால் பின்வாங்கிய நகராட்சி இயக்குனரகம்

ADDED : மார் 24, 2025 05:28 AM

பிப்.25ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் விலங்குகள், பறவைகளுக்கு திருத்தப்பட்ட ஆண்டு உரிமை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி மாடுகள் வளர்ப்புக்கு ரூ.500, குதிரை - ரூ.750, ஆடு - ரூ.150, பன்றி - ரூ.500, நாய், பூனை - ரூ.750 என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அ.தி.மு.க., சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா தலைமையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக திருப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான மாநகராட்சிகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக சென்னை மாநகராட்சியை விட மதுரையில் கட்டணம் அதிகம் என விமர்சனம் எழுந்தது. இது அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கட்டணம் விதிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதால் திருத்தப்பட்ட கட்டணத்தை செயல்படுத்த வேண்டாம் என அனைத்து மாநகராட்சிகளுக்கும் நகராட்சிகள் இயக்குநர் அலுவலகம் தரப்பில் வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சோலைராஜா கூறுகையில், ''முதலில் மதுரை மாநகராட்சியில் தான் இதற்கான எதிர்ப்பை பதிவு செய்தோம். இதன் எதிரொலியாக 22 மாநகராட்சிகளும் பயன்பெறும் வகையில் இக்கட்டணம் மறுபரிசீலனை செய்யப்படுகிறது வரவேற்கத்தக்கது'' என்றார்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை மாநகராட்சியில் பறவைகள், விலங்குகளுக்கான கட்டணம் 2021ல் நிர்ணயிக்கப்பட்டது. இதை திருத்தி அனைத்து மாநகராட்சிகளுக்கும் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக புதிய கட்டணத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வந்தபின்பே இதுதொடர்பான முடிவுகள் மேற்கொள்ளப்படும். அதுவரை பழைய கட்டணமே அமலில் இருக்கும் என்றார்.